பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று புருனே செல்கிறார்
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று புருனே செல்கிறார். பிரதமர் மோடி இன்றும், நாளையும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் புருனேயின் சுல்தான் ஹசனல் போல்கையாவை சந்தித்து இரு தரப்புக்கும் இடையேயான பரஸ்பர நட்புறவு குறித்து விவாதித்தார். புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி வரும் 4 மற்றும் 5 ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறார்.
காபூலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி
காபூலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி. இந்த கொடூர தாக்குதலில் 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் ரூ. 3,300 கோடி செலவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
குஜராத்தில் 3300 கோடி செலவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கென்ஸ் நிறுவனத்துக்கு குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது… 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம்
7261 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 19-ம் தேதி 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்காவுக்குள் 5,152 இந்தியர்கள் சட்டவிரோதமாக உள்நுழைந்துள்ளதாக தகவல்
அமெரிக்காவுக்குள் 5152 இந்தியர்கள் சட்டவிரோதமாக உள்நுழைந்துள்ளதாக தகவல். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எர்ணாகுளம்-எலகங்கா சிறப்பு ரயில் வண்டி எண் : 06101 எர்ணாகுளத்தில் இருந்து 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு எலகங்காவை சென்றடையும்.
இந்திய பந்துவீச்சாளர்கள் பிட்டாக இருப்பதாக ரவி சாஸ்திரி தகவல்
ஷமி, பும்ரா, சிராஜ், அஷ்வின் போன்ற இந்திய பந்துவீச்சாளர்கள் பிட்டாக இருப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியா கடுமையாகப் போட்டியிடும். இதில் எந்த கேள்வியும் இல்லை. பார்டர் – கவாஸ்கர் டிராபி உலகக் கோப்பையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராக அந்த கோப்பைகளை வென்றது எனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம். 1983 உலகக் கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் வெற்றிகளில் நான் ஒரு பகுதியாக இருந்தேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் அந்த இரண்டு வெற்றிகளும் 24 காரட் தங்கம் போன்றது.
Discussion about this post