தலைவரித்தாடும் தீண்டாமை கொடுமை…! போலி திராவிட மாடல் ஆட்சி…! எல்.முருகன் தாக்கு
தலைவரித்தாடும் தீண்டாமை கொடுமை எல் முருகன் தாக்கு. மனித நாகரீகம் அருவெறுக்கச் செய்யும் செயலை தடுத்து நிறுத்த திராணியற்ற போலி திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – குழந்தைகளை மகிழ்வித்த மோடி!
புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு குழந்தைகளை மகிழ்வித்த மோடி. இந்தியா மற்றும் புருனே இடையே தூதரக உறவில் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, புருனே மன்னர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா, பிரதமர் மோடியை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பின்னர் புருனேயின் தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள இந்திய தூதரகத்திற்கான புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க சட்டப் பேரவையில் கற்பழிப்பு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது
பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றம். கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், பாலியல் வன்முறைக்கு எதிரான புதிய மசோதாவை மேற்கு வங்க சட்டப்பேரவையில் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார்.
பழனி அருகே பழுதடைந்த குடிநீர் தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி
பழனி அருகே பழுதடைந்த குடிநீர் தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி. காப்பான்பட்டியில் ஊராட்சிக்கு உட்பட்ட சேதமடைந்த குடிநீர் தொட்டி இடிக்கும் பணி நடந்தது. கரூர், மணப்பாறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தண்ணீர்த் தொட்டியின் ஒரு பகுதி திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், ஜூன் 9 தேதி மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடந்தது. சென்னையில் 432 மையங்களில் நடந்த குரூப் 4 தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான பலுசிஸ்தான் விடுதலைப் படையின் தாக்குதல்கள் அதிகரித்து…
பாகிஸ்தானுக்கு எதிரான பலுசிஸ்தான் விடுதலைப் படையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போது பலுசிஸ்தான் கிளர்ச்சி பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் பலுசிஸ்தான் விடுதலைப் படையின் எதிர்பாராத தாக்குதலால் இரு நாடுகளும் தற்போது குழப்பத்தில் உள்ளன. இதே நிலை நீடித்தால் ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் பாகிஸ்தானில் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் எல்லையில் அதிரடிப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொலை
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தண்டேவாடா வனப்பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடலை மீட்ட போலீசார், நக்சலைட்டுகளின் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன். இந்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் மீது சிபிஐ சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
செபி தலைவர் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், தனியார் வங்கி நிர்வாகம் விளக்கம்
செபி தலைவர் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக தனியார் வங்கி நிர்வாகம் விளக்கம். இந்நிலையில், செபியின் தலைவராகப் பணிபுரியும் மதாபி புச், ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் அளித்த விளக்கத்தின்படி, அவர் 2013 அக்டோபர் 31 அன்று வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இந்தியர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு: ஆய்வில் தெரிய வந்துள்ளது
இந்தியர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில், பெண்களுக்கு அயோடின் குறைபாடு அதிகமாகவும், ஆண்களுக்கு துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் குறைபாடுகள் அதிகமாகவும் உள்ளன. குறிப்பாக 10 முதல் 30 வயது வரையிலானவர்கள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த குறைபாடுகள் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் அதிகமாக உள்ளன.
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை உருவாக்க மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை உருவாக்க மத்திய அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தொன்மையான தமிழைப் படிக்கும் வகையில் கல்லூரிகளில் தமிழ்த் துறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது டெல்லி தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தில் படங்களை ஆய்வு செய்து வெளியிடுவதாக நெட்ஃபிக்ஸ் தகவல்
தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தில் படங்களை ஆய்வு செய்து வெளியிடுவதாக நெட்ஃபிக்ஸ் தகவல். அனுபவ் சின்ஹா இயக்கிய, ‘IC 814: The Kandahar Hijack’ என்ற வெப் சீரிஸ் ஆகஸ்ட் 29 அன்று Netflix இல் வெளியிடப்பட்டது. 1999 இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தியதன் அடிப்படையில், பயங்கரவாதிகளுக்கு இந்துப் பெயர்கள் சூட்டப்பட்டதால் இந்தத் தொடர் சர்ச்சையைக் கிளப்பியது.
கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக மட்டும் 225 கோடி ரூபாய் செலவு… ஆர்டிஐயின் அதிர்ச்சி தகவல்
கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக மட்டும் 225 கோடி ரூபாய் செலவு ஆர்டிஐயின் அதிர்ச்சி தகவல். 2021-2024 வரையிலான அரசு திட்டங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 109 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்காக சுமார் 13 கோடி ரூபாயும், கடந்த 3 ஆண்டுகளில் செய்தித்தாள் விளம்பரத்திற்காக 111 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
அருப்புக்கோட்டையில் சாலை மறியலின் போது டிஎஸ்பி தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது
அருப்புக்கோட்டையில் சாலை மறியலின் போது டிஎஸ்பி தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது. இதையடுத்து பெண் டி.எஸ்.பி.யை தாக்கியது தொடர்பாக 3 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைப்பு…
உத்தரபிரதேச மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைப்பு. அரசு ஊழியர்கள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31 தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு இருந்தார். சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துப்பட்டியலை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து காணொலி காட்சி மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை வரும் 5 தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
Discussion about this post