அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் மற்றும் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனை பெலாரஸின் அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவுடன் மோதினார்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலெங்கா, எம்மா நவரோவை 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.