WhatsApp Channel
சீனாவில் வேலையின்மை அதிகரித்து வருகிறது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, தற்போது அங்கு 21.3 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். இதற்கு அரசாங்கத்தின் சில முரண்பாடான கொள்கைகளே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். 7 ஆண்டுகளுக்கு முன்பே அரசால் கைவிடப்பட்டாலும், அதன் தாக்கம் இன்னும் மக்களிடம் உள்ளது.
சீனாவில் இளைஞர் வேலையின்மை உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மற்ற நாடுகளின் வெற்றிகரமான முயற்சிகளில் இருந்து சீனா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post