WhatsApp Channel
ஒரு தொட்டியில் நல்ல வளமான மண்ணை இட்டு நிரப்பி துளசியையும், தொட்டால் சிணுங்கியையும் அருகருகே வைத்து தோட்டத்திலோ, மாடியிலோ தென்மேற்கு மூலையில் அதிகம் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, நெய் விளக்கு ஏற்றி,
பூஜை செய்து 21 முறை வலம் வரவேண்டும்..
தினமும் நெய்வேத்தியம் படைக்காவிட்டாலும் ஒவ்வொரு வெள்ளியன்றும். காலை மாலையில் நீராடி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர் அல்லது பானகம், வெண்பொங்கல் வைத்து பூஜை செய்து வரவேண்டும்.
தினமும் குளித்து விட்டு விளக்கேற்றி 21 முறை வலம் வருவதை மறக்காமல் செய்ய வேண்டும் என்றும், இதை நம்பிக்கையோடு தவறாமல் செய்து வந்தால் உங்களது பிரச்சனைகள் நீங்கும் என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்க வேற துளசிதான் எங்க வீட்ல எப்பவும் இருக்கே, என்கிறீர்களா? துளசி இருக்கும், அனால் தொட்டால் சிணுங்கி இருக்காது.
அதுதான் துளசியின் கணவனான ஜலந்திரன் என்கிற அசுரன். இவன் ஈஸ்வரனிடம் அழியாத வரங்களைப் பெற்றவன். தேவலோகத்தையே அழித்து நாசம் செய்தவன். மனைவி மேல் பாசம் கொண்டவன்.
மகா விஷ்ணுவின் தந்திரத்தால் ஜலந்திரன் தலை துண்டிக்கப்பட்டு துளசியின் மடியில் விழுந்ததாகப் புராணம் சொல்கிறது. துளசியின் மேல் மனமிரங்கி இருவரையும் மூலிகைகளாக வரம் அளித்து மகா விஷ்ணு அருளியதாகச் சொல்லப்பட்டுள்ளது.
இரு மூலிகைகளுக்கும் அனேக அற்புத சக்திகளை மகா விஷ்ணு தந்தருளியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
துளசி, தொட்டாற்சிணுங்கியை திங்கள் கிழமையன்று பூஜை செய்து வலம் வந்தால், எண்ணங்கள் யாவும் ஈடேறும்.
ஐந்து வாரங்களில் இதற்கான பலன் தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து செய்து வந்தால் பலன் நிலைத்திருக்கும்..
துளசி, தொட்டாற்சிணுங்கியை
வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து வலம் வந்தால், குடும்ப ஒற்றுமை, போக பாக்கியம், லட்சுமி கடாட்சம் யாவும் உண்டாகும்.
செவ்வாய், சனிக் கிழமைகளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும்.
வியாழக்கிழமை வலம் வந்தால் விரோதிகள் வசியமாவார்கள்.
அந்தந்த கிழமைகளின் பலன்கள் யாவும் சித்திக்கும்.
இந்த அரிய தகவல் சித்தர்களின் தலைமைக்குருவான அகத்தியரால் சொல்லப்பட்டதாகும்.இதை அலட்சியமாக எண்ணாதீர்கள்.
அப்படி தொட்டாற் சிணுங்கி செடியில் என்னதான் இருக்கிறது என்று ஆராயப் போனால் அதில் பல விஷேசமான சக்திகள் சொல்லப்பட்டுள்ளன.
அது மின் சக்தி உள்ள ஒரு மூலிகை என்றும், அதை ஒரு மண்டலம் தினமும் தொடுபவன் மன ஆற்றல் பெருகும் என்றும், சொன்னது பலிக்கும், நினைத்தது நடக்கும் என்றும், ஆண்மையைப் பெருகும் என்றும், சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வாகிய மூலிகை என்றும், மந்திர சக்தி உடையது என்றும் பல விஷேச சக்திகள் சொல்லப்பட்டுள்ளன.
துளசி வெப்ப மூட்டும் மூலிகை, தொட்டாற் சிணுங்கி வெப்பத்தை குறைக்கும் மூலிகை.
துளசி மின்சாரத்தால் அடி பட்டவர்களைக் காக்கும், தொட்டாற் சிணுங்கி மின் சக்தியைத் தூண்டும்.
இப்படி ஒன்றுக் கொன்று எதிர் இயக்கங்களைக் கொண்ட பெண்பால் ஆண்பால் மூலிகையான கணவனும் மனைவியுமாக துளசியும், தொட்டால் சிணுங்கியும் திகழ்கிறது.
இத்தனை இலட்சம் மூலிகைகளில் இவை இரண்டிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை சித்தர்கள் எப்படித்தான் கண்டுபிடித்தனரோ என்று ஆச்சர்யம் தோன்றுகிறது.
இதில் மேலும் ஒரு விந்தை என்ன வென்றால் பெண்பாலான துளசி சூரியனின் அம்சம். ஆண்பாலான தொட்டால் சிணுங்கி சந்திரனின் அம்சம். நம் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் ஆண்பால், சந்திரன் பெண்பால்.
மூலிகையில் அந்த சூக்குமம் அப்படியே மாறி நிற்கும் காரணத்தை சித்தர்களே அறிவார்கள்.
Discussion about this post