WhatsApp Channel
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இதில் மோரியா மக்பூல், அப்ரார் (எ) சலீம் பரூக் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். மேலும் 2 பயங்கரவாதிகளிடம் இருந்து நவீன ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Discussion about this post