டெல்லி சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை தீவிர பிரச்சாரம் ஓய்கிறது.
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவதால் பிரச்சாரக் கூட்டங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது. இதன் விளைவாக, தலைநகர் முழுவதும் இறுதிக் கட்ட பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது.
டெல்லி தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களின் பிரச்சாரத்தால் தொடர்ந்து பரபரப்பாக உள்ளது.
Discussion about this post