WhatsApp Channel
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென அன்வர்ராஜாவை அமைப்புச் செயலாளராக நியமித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அதிமுக நெருக்கமாக இருந்தது. பாஜகவின் மற்றொரு கிளை அமைப்பாக அதிமுக செயல்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைந்த நாள் முதல் பாஜகவின் பிடியில் அதிமுக இருந்தது. அ.தி.மு.க.வில் பிளவுகளை உருவாக்கவும், பிளவுகளைச் சரிசெய்யவும் டெல்லி பா.ஜ.க தலைமை தலையிட்டு வந்தது. அ.தி.மு.க.,வில், மாநில அலகாக, பிரச்னை என்றால், அக்கட்சி தலைவர்கள், டில்லி பா.ஜ., தலைமையிடம் சென்று, புகார் கொடுத்து, தீர்வுக்காக காத்திருப்பது, கடந்த கால வரலாறு.
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு: ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியதால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும் போராட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜகவின் இந்த நிலை சற்று சகிக்க முடியாததாகி விட்டது. இதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை என்ற உறுதியான முடிவுக்கு அதிமுக வந்துள்ளது.
இல்லாத முஸ்லிம் வாக்குகள்: அதிமுக 2019 மக்களவைத் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களை பாஜகவுடன் சந்தித்தது. இதனால் இயல்பாகவே முஸ்லிம்களின் வாக்குகள் அதிமுகவுக்கு கொஞ்சம் கூட விழவில்லை. இப்போது பாஜகவுடன் ஒட்டவில்லை; எந்த உறவும் இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஆனால், முஸ்லிம்களை உடனடியாக அதிமுக பக்கம் திருப்ப முடியாது.
அன்வர்ராஜா ரிட்டர்ன்: முஸ்லிம் வாக்குகளை திசை திருப்ப அடுத்தடுத்த காட்சிகளை அரங்கேற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஓரங்கட்டப்பட்ட அன்வர்ராஜாவுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்து விமர்சித்ததால் மருமகள் கதை என அதிமுகவில் தூக்கி எறியப்பட்டார் அன்வர்ராஜா. தற்போது அதிமுக அன்வர்ராஜாவை மீண்டும் காட்சிக்கு கொண்டு வந்துள்ளது.
முஸ்லிம் வாக்குகள்: இதைத் தொடர்ந்து அதிமுக ஆதரவு முஸ்லிம் கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய கைதிகள் விவகாரத்தில் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு அதிமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர். இப்படி போராட்டம் நடத்தும் போது பெரிய முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் தங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆபரேஷன் எம் என்று சொல்லும் அளவுக்கு முஸ்லிம்களை குறிவைத்து வேகமாக நகர்கிறது அதிமுக.
Discussion about this post