WhatsApp Channel
காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் தீர்மானம் இல்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப் பேரவையில் நடைபெற்று வருகிறது. தனித் தீர்மானம் மீதான விவாதத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், காவிரிப் பிரச்னைக்கு முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிரந்தரத் தீர்வு இல்லை எனக் கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Discussion about this post