WhatsApp Channel
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்ஆர் காங்கிரசில் முதல்வர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
போக்குவரத்து, ஆதி திராவிட நலன், வீட்டுவசதி, தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு, கலை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகளை அவர் கொண்டிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அண்மைக்காலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post