WhatsApp Channel
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கை பிரதிபலிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று ராஜ்பவன் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. அற்ப விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் தி.மு.க மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் வீதியில் இறங்கி உள்ளனர்.
2022ல் சென்னையில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகத்தை தாக்கிய அதே நபர் இன்று ராஜ்பவன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களுக்கு திமுக அரசு நிதியுதவி செய்வதாகத் தொடர் தாக்குதல்கள் தெரிகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் போல் அடுத்த திருப்பத்திற்கு தயாராகி வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post