WhatsApp Channel
மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரின் பாதுகாப்பையும், அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post