அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா உறுதி
தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலைக்கு கட்சியின் தேசிய கட்டமைப்பில் பொறுப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகள் செய்துள்ளார். பிரதமர் மோடியின் கொள்கைகளை கிராமங்கள் வரை கொண்டு செல்லும் பணி அவரது தலைமையில் சிறப்பாக நடந்துள்ளது” என புகழ்ந்துள்ளார்.
அதேவேளை, தமிழக பாஜக தலைமை பதவிக்காக நயினார் நாகேந்திரனிடமிருந்து வேட்புமனு பெறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் எதிர்கால வளர்ச்சியில் அண்ணாமலையின் திறன்களை தேசிய அளவில் பயன்படுத்தும் வகையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் அமித் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.