பாமகவின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்ட அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தான்தான் தொடர்ந்து செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் மடல் ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மடலில், கட்சித் தலைமையைப் பற்றிய குழப்பங்கள் சிலர் மூலம் பரப்பப்பட்டு வருவதாகவும், இது கட்சி வளர்ச்சிக்கும், வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் தான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்டதுடன், தேர்தல் ஆணைய அங்கீகாரமும் பெற்றிருப்பதால், பாமகவின் சட்டபூர்வத் தலைவராக தானே இருப்பதாகவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணியை உருவாக்குவது தான் முக்கியமான கடமை எனக் கூறிய அன்புமணி, அந்தக் கடமையை சரியான நேரத்தில் மகிழ்ச்சியளிக்கும் வகையில் நிறைவேற்றுவோம் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.