திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அலை” – நயினார் நாகேந்திரன்
திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் நடத்தி வந்த ஆட்சி முறையை மக்கள் ஏற்க மறுத்து விட்டனர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மின்சார கட்டண உயர்வு, வீட்டு வரி சுமைகள் போன்ற விஷயங்களில் திமுக அரசு மக்கள் எதிர்பார்ப்புக்கு புறம்பாக செயல்பட்டுள்ளது,” என்று கூறினார்.
“தகுதி வாய்ந்த பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என திமுக அறிவித்தது. ஆனால் அதற்கான தெளிவான நிபந்தனைகள் என்ன? யாருக்கு இது வழங்கப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பிய நயினார் நாகேந்திரன், இது போல பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றார்.
மேலும், பாஜக – அதிமுக கூட்டணி தமிழக நலனுக்காக அமைந்துள்ளது எனவும், இந்த கூட்டணி தமிழில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தகுதி வாய்ந்த குடும்ப பெண்களுக்கு ரூ.1000 என்று திமுக யாரை கூறுகிறது? நயினார் நாகேந்திரன்