பிராமணர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும். அவனும் இந்த நாட்டின் குடிமகன் தான் என திமுக மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ஆவேசம் அடைந்துள்ளார்.இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ”பிராமணர்களை குறிவைப்ப்து 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதனை நிறுத்த வேண்டும். பிராமணர்களும் நமது நாட்டின் குடிமகன்கள்தான். பிஎஸ்பிபி பள்ளியை அரசாங்கம் கையில் எடுக்க உள்ளதாக திமுக அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா தொற்று காலத்தில் இந்தப்பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த ஆசிரியர் பிராமணர் அல்ல. ஆனால் பிராமணர்கள்தான் இதை செய்தார்கள் என பிரச்சாரம் செய்தார்கள்.
பிராமணர்களுக்கு எதிராக மிகப்பஎரிய சதி தமிழகத்தில் ரொம்ப நாளாக நடந்து கொண்டு இருக்கிறது. பிராமணர்கள் அந்த அச்சத்தை உணர்ந்து இருக்கிறார்கள். அவர்களை கேவலப்படுத்துவது, சமூக வலைதளங்களில் விமர்சிப்பது, பிராமணர்களின் பூநூலை வெட்டுவது, அவர்களது குடுமியை வெட்டுவது, கோயில் பூசாரிகளை மிரட்டுவது என அச்சமூட்டும் கட்சிகளின் இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதிகளின் வேலை தான். திமுக பிராமணர்களின் அச்சத்தை போக்க வேண்டும்.
இது அவர்களது கடமை. பிராமணர் சமுதாய மக்கள் மாநிலத்தில் எந்த இடத்துக்கு போனாலும் ஒரு அச்சம் உண்டாக்கப்படுகிறது. மு.க.ஸ்டாலினிடம் புதிய திசையை எதிர்பார்க்கிறேன். அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு கோயிலுக்கு போய் வருகிறார். ஆகையால் மு.க.ஸ்டாலினை எதிர்க்கும் எண்ணமில்லை. எதிர்க்கவும் இல்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் அவரது அரசாங்கத்தில் உள்ளவர்களை கட்டுப்படுத்த வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Discussion about this post