மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் அறையின் கூரையினை உடனடியாக மறு சீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்படும் என தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் த .மனோதங்கராஜ் தெரிவித்தார்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து வணங்கி செல்வதால் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது .
Breaking News…. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீடீரென தீ விபத்து… Mandaikadu Bhagwati Amman temple fire accident…
இந்நிலையில் இன்று காலை ஆறு முப்பது மணிக்கு வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு பூஜாரிகள் கருவறைக்கு வெளியே அமர்ந்திருந்தபோது திடீரென கருவறையின் கூரையில் மளமளவென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் தக்கலை மற்றும் குளச்சல் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் மூலமாக துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இதற்கிடையே பொதுமக்களும் அங்கு திரண்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தீபாராதனை முடித்து வைக்கப்பட்டிருந்த தீபத்திலிருந்து கருவறையில் தீப்பற்றி பிடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் பக்தர்களால் முன்வைக்கப்படுகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கீழ் பகுதியில் தீ பிடிக்காமல் மேற்கூரையில் மட்டும் தீ பிடித்தது எப்படி என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் நிலவிவருகிறது.
இந்நிலையில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கோவிலின் பழமை மாறாமல் புரனமைக்க அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Discussion about this post