மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்க கூடுதல் வாகனங்களில் செல்ல அனுமதி கோரி மணிமுத்தாறு சோதனை சாவடியில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குத்தகை காலம் முடிவதற்குள் அவர்களை அப்புறப்படுத்த முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொழிலாளர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் 10 வாகனங்களில் செல்ல முயன்றனர்.
ஆனால், மூன்று வாகனங்களுக்கு மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கியது. இதனால் மணிமுத்தாறு சோதனை சாவடியில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 7 வாகனங்களில் செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
Discussion about this post