அரசியல் சாசனம் பற்றி பேசும் அளவுக்கு காங்கிரசுக்கு அருகதை இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில், அவசரகால தினத்தை நினைவு கூறும் வகையில், பா.ஜ., சார்பில் கூட்டம் நடந்தது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு எமர்ஜென்சி காலத்தில் மக்கள் சந்தித்த துயரங்கள் குறித்து பேசினார்.
அப்போது பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சி காலத்தில் நம் நாடு எப்படி இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அரசியல் சாசனம் பற்றி பேச காங்கிரஸ் தயாராக இல்லை என்றும் கூறினார்.
எமர்ஜென்சிக்கு பிறகு நடந்த தேர்தலில் தோல்வி பயத்தில் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தவர் இந்திரா காந்தி என்றும், ஒருவேளை காந்தி குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.
மேலும், அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களால் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை என்றும், மோடி போன்ற முதிர்ந்த தலைவர்களை என்றென்றும் விட்டுவிடக்கூடாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.