மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, எக்ஸ் இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேற்கு வங்க மாநிலம் சோப்ரா எம்.எல்.ஏ. ஹமிதுர் ரஹ்மானுக்கு நெருக்கமான கொலை மற்றும் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர் பொது இடத்தில் அந்தப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பெண் முதல்வரின் ஆட்சியில் இதுதான் நிலமை என்றும், திரிணாமுல் காங்கிரசுக்கு அப்பகுதிக்கு தனது பிரதிநிதிகளை அனுப்ப தைரியம் உள்ளதா என்றும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post