குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்துக்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி பாஜக இளைஞர் அணியினர் அகமதாபாத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சென்ற காங்கிரஸ் கட்சியினர் திரண்டதால் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் கற்களை வீசியும், தடியடி நடத்தியும் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
Discussion about this post