திமுகவின் மக்கள் விரோத அராஜகத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது X பதிவில் எழுதியிருப்பதாவது,
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.வி. ஜி புரம் பஞ்சாயத்தில், பட்டா இடத்தில் கட்டப்பட்டு குடியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, வீடுகளை விட்டு மக்களை வற்புறுத்தி, அலைக்கழித்து, தி.மு.க., அரசு இடித்துள்ளது.
தடையை மீறி வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த 8 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி ஒன்றிய பாஜக மண்டலத் தலைவர் திரு.வீர பிரம்மச்சாரி, ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் திரு.எஸ்.கே.பாலாஜி ஆகியோரையும் திமுக அரசு கைது செய்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் பட்டா இடத்தில் வீட்டை இடித்த வாலிபர் தீக்குளிக்க முயன்ற அதிர்ச்சியை அடையும் முன்னரே திருவள்ளூரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துள்ளது திமுக அரசு.
திமுகவின் இந்த பொது விரோத அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பட்டா நிலத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post