தமிழக பாஜக செயற்குழு கூட்டம் வரும் 6ம் தேதி சென்னையில் நடக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக செயற்குழு கூட்டம் வரும் 6ம் தேதி சென்னை திருவேக்காட்டில் உள்ள ஸ்ரீ வரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்த சந்திப்பு தமிழகத்தின் எதிர்கால அரசியல் மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post