ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டினார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் 13 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி கௌஷிகா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பாராட்டினார்.
இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கவுசிகா பல்வேறு சாதனைகள் தொடர வாழ்த்து தெரிவித்தார்.