விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிச் சின்னமாம் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அண்ணன் திரு.C.அன்புமணி அவர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் திரு.கே.அண்ணாமலை.
இன்றைய தினம் காலை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், வெற்றிச் சின்னமாம் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அண்ணன் திரு.C.அன்புமணி அவர்களை ஆதரித்து, ஶ்ரீராமர் வழிபட்ட அபிராமேஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கும் திருவாமத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
மனித வளர்ச்சிக் குறியீட்டில், விழுப்புரம் மாவட்டத்தை கடைசியில் இருந்து நான்காவது இடத்தில் வைத்திருப்பதுதான் திமுகவின் இத்தனை ஆண்டு கால ஆட்சியின் சாதனை. தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம், கஞ்சா என போதைப்பொருள்கள் விற்பனை திமுக ஆதரவுடன் நடக்கிறது. பொதுமக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஆட்சி நடத்தும் திமுகவுக்கு, விக்கிரவாண்டி தேர்தல் ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் அன்புமணி அவர்களும், தமிழ் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அண்ணன் திரு.C.அன்புமணி அவர்களைத் தேர்ந்தெடுத்தால், அவர் மக்களுக்காக உழைப்பார். மக்களுடனே இருப்பார்.
விக்கிரவாண்டி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர்தேக்கமாக மேம்படுத்தல், விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள மயானத்தில் மின் மயானம், வாதானூரான் வாய்க்கால் கரையை மேம்படுத்தல், முண்டியம்பாக்கம் – ஒரத்தூர் சாலையில் ரயில்வே மேம்பாலம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிதாக நீர்த்தேக்க தொட்டி, விக்கிரவாண்டியில் நீதிமன்ற கட்டிடம், நீதிபதிகள் குடியிருப்பு, வட்டாட்சியர் குடியிருப்பு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் விடுதி கட்டிடம் என எந்தக் கோரிக்கைகளையும் திமுக இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இதுவரை 4,777 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். விழுப்புரம் ரயில் நிலையம் 24 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. 76,904 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,67,008 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,48,964 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,30,371 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,88,474 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 5,28,599 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், விழுப்புரம் மாவட்டத்திற்கு 5,104 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வழங்கியுள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.
கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தாமல், 65 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த திமுகவுக்கு, முதல் எச்சரிக்கை, இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில், அண்ணன் திரு. C.அன்புமணி அவர்களுக்கு, மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வதே, 2026 ஆம் ஆண்டு ஏற்படவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு முதல் படியாக இருக்கும். எனவே, பொதுமக்கள் அனைவரும், மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் திரு.கே.அண்ணாமலை தெரிவித்தார்.
Discussion about this post