சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி பகுஜன் சமாஜ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார். நேற்று மாலை சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இந்த திடீர் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆம்ஸ்ட்ராங் ஜீரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேசியக் கட்சித் தலைவர் ஒருவர் பொது இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆனால், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள தங்கள் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மாநகராட்சியிடம் ஏற்கனவே மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் முறையிட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post