பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு, ஆம்ஸ்ட்ராங் படுகொலை நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இளம் தலைவரின் உயிர் கொடூரமான முறையில் எடுக்கப்பட்டதாக ஜே.பி.நட்டா புலம்பியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என்றும் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் கொலை, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் அலட்சியப் போக்கை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
ஏற்கனவே மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜே.பி.நட்டா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
24 மணி நேரமும் அற்ப அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்கவும், ஏழைகளுக்கு கருணை காட்டவும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post