தமிழகத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொலைகள் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்திரராஜன், திராவிட மாடல், தற்போது கொலை மாடலாக மாறிவிட்டது என்று விமர்சித்தார்.
தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்துவிட்டதாகவும், இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மவுனம் காத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை என்று கூறிய தமிழிசை செளந்தரராஜன், கள்ளக்குறிச்சிக்கு கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய தமிழிசை செளந்தரராஜன், இதுபோன்ற இடங்களுக்கு செல்ல முதல்வர் பயப்படுவதாகவும் கூறினார்.
Discussion about this post