விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பல்வேறு தந்திரங்களையும், பொய் பிரச்சாரங்களையும் முறியடித்து திமுக வேட்பாளருக்கு அமோக வெற்றியை அளித்துள்ளதாக ஜவாஹிருல்லா மகிழ்ச்சி தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக – பாமக இடையேதான் உண்மையான போட்டி என்று கருதப்பட்டது. இறுதியில் திமுக மகத்தான வெற்றி பெற்று பாமக தோற்றது.
ஆனால், ஓட்டுக்கு பணம், பொருள் என எதையும் கொடுக்காமல் அதிக வாக்குகள் பெற்றதாக பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது பாமகவுக்குக் கிடைத்த உண்மையான வெற்றி என்று பெருமிதம் கொள்கிறார்கள்.
பாராட்டு: எதிர்க்கட்சிகளின் பல்வேறு யுக்திகளையும், பொய்ப் பிரசாரங்களையும் முறியடித்து விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் சாதனை படைத்துள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேராசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல சூழ்ச்சிகள்: இந்த வெற்றி திமுகவின் மூன்றரை ஆண்டுகால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டன. பொய் பிரசாரம் செய்து, அவதூறு பரப்பி வந்தனர். இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தியக் கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்திய கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மத்திய அரசின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காட்டுகிறது. இந்தியக் கூட்டணி மீண்டும் மீண்டும் வலுப்பெறுவது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.
நன்றி: விக்கிரவாண்டியை வெற்றி பெறச் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், களப்பணியாற்றிய இந்தியக் கூட்டணிக் கட்சியினருக்கும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய் பிரச்சாரத்தை நிராகரித்து மகத்தான வெற்றியை பதிவு செய்தனர்.
Discussion about this post