தமிழக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த ஐயா அமரர் திரு.C.வேலாயுதன் அவர்கள் நினைவு மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை.
தமிழகத்தின் அரசியல் சரித்திரத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் பெயர்களில் அமரர் வேலாயுதன் அவர்கள் பெயரும் ஒன்று. நமது முன்னாள் பாரதப் பிரதமர் அமரர். வாஜ்பாய் அவர்கள், கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது கட்சி இடம்பெற்றிருக்கிறது என்று ஐயா வேலாயுதன் அவர்கள் குறித்துப் பெருமையுடன் குறிப்பிட்டார். முற்றிலும் எதிரான கொள்கை மற்றும் தத்துவம் கொண்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் ஆகியோரின் அன்பையும் பெற்றிருக்கும் அளவுக்கு, சட்டமன்ற உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றியவர்.
கன்யாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கன்யாகுமரி மாவட்டத்தில், மருத்துவக் கல்லூரி அமைக்க, முதன்முதலில் குரல் கொடுத்தவர். கன்யாகுமரியில் மூன்று பொறியியல் கல்லூரிகள், அவரது முயற்சியினால் கொண்டு வரப்பட்டவை. சட்டமன்றத்தில் குரல் கொடுத்து, தமிழகம் முழுவதும், 5,000 சாலைப் பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வைத்தவர். இளைஞர்களின் அன்பைப் பெற்றிருந்தவர். பாஜகவின் எழுச்சிக்குக் கடுமையாக உழைத்தவர்.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த ஐயா C. வேலாயுதன் அவர்கள் பெயரில், கன்யாகுமரி மாவட்ட பாஜக சார்பில், இந்த ஆண்டிலிருந்து, பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில், முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐயா வேலாயுதன் அவர்கள் சிலையை அற்புதமாக வடிவமைத்துள்ள சிற்பி சகோதரர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு, பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கன்யாகுமரி மாவட்டத்துக்கு வரும் பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும், ஐயா வேலாயுதன் அவர்கள் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தி, அவரது மணிமண்டபத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
ஐயா அமரர் வேலாயுதன் அவர்கள் மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில், வணக்கத்திற்குரிய வெள்ளிமலை சுவாமிகள், நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கன்யாகுமரி மாவட்டத் தலைவர் அண்ணன் திரு.தர்மராஜ் அவர்கள், சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் அண்ணன் திரு.நைனார் நாகேந்திரன் அவர்கள், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஐயா திரு.M.R.காந்தி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி M.விஜயதரணி அவர்கள், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பொன்.பாலகன்பதி அவர்கள், மாநிலச் செயலாளர் திருமதி.மீனதேவ் அவர்கள், மகளிர் அணி மாநிலத் தலைவி திருமதி.உம்ரதி ராஜன் அவர்கள், ஆன்மீகப் பெரியவர் ஐயா சிவச்சந்திர சுவாமிகள் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள், ஆர்.எஸ்.எஸ். ஆன்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை.
Discussion about this post