திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது, ஆனால் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து தனது X பதிவில்,
சென்னையில் இன்று தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைத் தீர்ப்பது, அரசாணை 243 கைவிடுதல் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதிப் போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஈட்டிய விடுப்பு சரணடைய அனுமதி. ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எண்.309 மற்றும் 311ல், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கவும் உறுதியளித்திருந்தது.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் கடந்தும், ஆசிரியர்களின் போராட்டம், ஆண்டுதோறும் தொடர்கிறது, ஆனால், அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.
மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post