புலிகள் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், உலகில் உள்ள புலிகளில் 70 சதவீதம் இந்தியாவில்தான் காணப்படுகின்றன.
அதற்கான புள்ளிவிவரங்களையும் பட்டியலிட்டார். அந்த வகையில், இந்தியாவில் 2006ல் 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் இரண்டரை மடங்கு அதிகரித்து, 3,682 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மகத்தான உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பெருமையாக கருதுவதாக அந்த பதிவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.