மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க மீனவர் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்கின்றனர்.
கடந்த வாரம், இலங்கை கடற்படையின் ரோந்து படகு, இலங்கை கடற்படை ரோந்து படகு மீது மோதியதில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் மாலச்சாமி இறந்தார், ராமச்சந்திரன் கடலில் காணாமல் போனார்.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்தனர். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தமிழக மீனவர் பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளார்.
இதற்காக கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரதிநிதிகள் அண்ணாமலையுடன் நாளை டெல்லி செல்ல உள்ளனர்.
Discussion about this post