ஆர்எஸ்எஸ் தேசத்தை நேசிக்கும் இயக்கம் என்று பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா பெருமிதம் தெரிவித்தார்.
இது குறித்து ராஜ்யசபாவில் பேசிய அவர்,
காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். மேலும், 1 லட்சத்து 25 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தேசத்தின் மீது கொண்ட அன்பினால் ஆர்எஸ்எஸ் வலுப்பெற்றது என்றும், பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக முழு பலத்துடன் தாய்நாட்டிற்கு சேவை செய்து வருவதாகவும் ஜேபி நட்டா கூறினார். அரசியல் சாசனம் பாதுகாக்கப்படும் என்றும் நட்டா குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post