மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதனை வரவேற்று மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்தார்.
மாநிலத்தில் முதல்வராக பெண் ஒருவர் பதவி வகித்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜே.பி.நட்டா வேதனை தெரிவித்தார்.
மேலும், மேற்கு வங்க அரசு பெண் மருத்துவர் கொலை வழக்கை மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் உத்தரவை வரவேற்பதாகவும் கூறினார்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.