மத்திய அரசின் மலிவு விலையில் வாடகை வீடுகள் வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள வல்லம்-வடகாலில் பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்காக ரூ.707 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,
2020-ம் ஆண்டு மலிவு விலையில் வாடகை வீடுகள் வளாகத் திட்டம் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வல்லம்-வடகாலில் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி மத்திய அரசின் மானியம் மற்றும் வங்கி கடனுதவியில் கட்டப்பட்டுள்ளது என்றார். மலிவு விலையில் வாடகை வீடுகள் கட்டும் திட்டத்தை, வழக்கம் போல் மக்களுக்கு தெரிவிக்காமல், முதல்வர் புறக்கணித்து விட்டாரா என, அண்ணாமலை கேட்டுள்ளார்.
Discussion about this post