இனி தமிழக மக்களுக்காக உழைப்போம் – விஜய்
தமிழ்நாடு வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
கொடியில் வைக்கப்பட்டுள்ள படங்களின் விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் முன்வைக்கிறேன். முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வளவு காலம் நமக்காக உழைத்தோம். தமிழக மக்களுக்காக உழைப்போம். தமிழக மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். சந்தோஷமா கட்சிக் கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.
இது கட்சிக் கொடி அல்ல. வருங்கால சந்ததியினருக்கான வெற்றிக் கொடி. உரிய அனுமதி பெற்று, தொண்டர்கள் தங்கள் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும். அனைவரின் தோழமையையும் பாராட்டி முறையான அனுமதி பெற்று கொடி ஏற்றி கொண்டாடுங்கள். அனைவருக்கும் நம்பிக்கை வையுங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Discussion about this post