போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மனிதனாகப் பிறப்பது அரிது என்பதால், அப்படிப் பிறந்தாலும், கல்வியில் சிறந்து விளங்குவது அதிலும் அரிது என்பதால், சிறுவர், சிறுமியர் பள்ளிகளில் படித்து கல்வியும், ஒழுக்கமும் பெற்று வந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் பள்ளிகள் போதைப்பொருள் கூடமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை என்று சொன்னால் அது மிகையாகாது.
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் சிறுமியின் பிறந்தநாளை பீர் பாட்டிலில் வைத்து கொண்டாடியதாக நாளிதழில் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் ‘பேடி’ எடுப்பதாகவும், பள்ளி மாடியில் ‘கூல் லிப்’ என்ற போதைப்பொருள் சர்வசாதாரணமாக கிடைப்பதாகவும், பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்டு, பெட்டி 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. , மற்றும் வடசென்னையில் பல பள்ளிகளில் போதைப்பொருள் கடத்தல் உள்ளது.
மேற்படி பள்ளியில் ஆய்வகம், நூலகம் மூடப்பட்டுள்ளது, புதிதாக வாங்கிய மேசைகள் ஆய்வகத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது, கணினி அறை அலங்கோலமாக உள்ளது, 12ம் வகுப்பு மாணவர்கள் உயிரியல் ஆய்வக அறை, கழிப்பறையில் அமர்ந்துள்ளனர். சுகாதாரமற்ற நிலையில், மாணவர்களுக்கு குடிநீர் இல்லை. குடிநீர் கொடுக்க முடியாத அவல நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்பள்ளியில் மிகப் பெரிய மைதானம் இருந்தும், விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால், மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற கருத்துப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அவல நிலை நீடிக்கிறது. பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், பராமரிப்பு, குடிநீர் வசதி போன்றவை இல்லை.அதே நேரத்தில், போதைப்பொருள் நடமாட்டம் அமோகமாக உள்ளது.
இப்பள்ளியில் மிகப் பெரிய மைதானம் இருந்தும், விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால், மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சோறுக்கு ஒரு சோறு பதம் என்றபடி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அவலம் நீடிக்கிறது. பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம், பராமரிப்பு, குடிநீர் வசதி போன்றவை இல்லை.அதே நேரத்தில், போதைப்பொருள் நடமாட்டம் அமோகமாக உள்ளது.
எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதில் தனிக்கவனம் செலுத்தி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
Discussion about this post