அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்போது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதம் செலவிடப்படவில்லை என தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Discussion about this post