இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க., பிளவின் போது, இடைத்தரகர்களாக செயல்பட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர், சசிகலா தலைமையிலான அணிக்கு கட்சியின் சின்னத்தை மீட்டெடுக்க, இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1.3 கோடி மற்றும் சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், லஞ்ச வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post