தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி பூலிதேவரின் 309வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெல்கோட்டம்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப் பொருட்கள் சுதந்திரமாக விற்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கனிமங்கள் எடுக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தொடர்ந்தால், மாபெரும் போராட்டம் நடத்துவோம்,” என்றார்.
Discussion about this post