கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக மட்டும் 225 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் நடந்த விளம்பரச் செலவு குறித்த முழு விவரம் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
அதில், 2021-2024 வரையிலான அரசு திட்டங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 109 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 முதல் 2024 வரை தனியார் தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்காக சுமார் 13 கோடி ரூபாயும், கடந்த 3 ஆண்டுகளில் செய்தித்தாள் விளம்பரத்திற்காக 111 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
Discussion about this post