நிலமோசடி வழக்கில் எம்ஆர் விஜயபாஸ்கரின் தம்பியை சிபிசிஐடி கைது செய்தது. நீதிமன்ற காவலில் விசாரணைக்கு அனுமதி அளித்தது.
100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கையெழுத்துப் போடுகிறார்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சேகரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து கரூர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சேகரை நேரில் ஆஜர்படுத்தினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேகரை 2 நாட்களுக்கு சி.பி.சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து கரூர் காந்தி கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. சேகர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post