திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் பாஜக சார்பில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதை ஆந்திர முதல்வர் உறுதி செய்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தில் இருக்கக்கூடாது அரசு நிர்வாகத்திலும் இருக்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வத்தை போலீசார் விசாரிக்க வேண்டும். ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சியின் பேச்சுகள் இந்திய நாட்டிற்கு எதிரானது என ஹெச்.ராஜா கூறினார்.
Discussion about this post