ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லை; டில்லியில் முதல்வர் ஸ்டாலின் ‘
டெல்லியில் ஸ்டாலின் பேட்டியில் இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமர் மோடியின் கையில் தான் உள்ளது.
3 முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.
- ) தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்கவில்லை. காரணம் காட்டி மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் இருக்கிறோம்.. #ஸ்டாலின் .
தமிழகம் ஏற்கவில்லை என்பது பொய். உங்கள் குடும்பம் ஏற்கவில்லை ன்று சொல்லுங்கள்
உங்கள் திராவிட மாடல்கள் நடத்தும் அதாவது உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் தமிழ் மட்டும் தான் வளர்க்கீறீர்களா? இல்லை ஹிந்தியை வழக்கிறிங்களா ? அவர்கள் நடத்தும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இந்தி படிக்கலாம் ஆனால் அரசாங்க பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் ஹிந்தி படித்து முன்னேற கூடாதா? எத்தனை காலம் தான் ஏமாற்றி கொண்டு இருக்க போகிறீர்கள்?
- ) சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். மத்திய அரசு நிதி தராததால் மெட்ரோ பயணிகள் தொய்வு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் . #ஸ்டாலின் .
ஒரு வருடத்திற்கு முன் தங்கள் பேட்டியில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க விட்டால் தமிழக அரசு நிதி ஒதுக்கி அதை நிறைவேற்றுவோம் என்று வீம்புக்கு சொன்னீர்களே இப்போம் என்னாச்சி அந்த கூற்று,,
நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை என்று ஒப்புக்கொண்ட பிறகு இப்போது அது முடியாது என்று தெரிந்தவுடன் மத்திய அரசின் மேல் பழிபோடுவதும், உடனே நிதி தர வேண்டும் என்று கேட்பதும் கேவலமான அரசியல் அல்லாவா..
முதலில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலத்தை கையக படுத்தி கொடுங்கள். நிலத்தை கையகப்படுத்தாமலே மத்திய அரசிடமிருந்து எப்படி நிதி கேட்க முடியும்?
எப்போதுமே திமுகவின் நடைமுறை என்பது வீரவசனம் பேசுவது, பிறகு அதை மறைக்க மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க பார்ப்பது இப்படிதான் இருக்கிறது திமுகவின் சிந்தனை
3.) இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். #ஸ்டாலின்…
உக்கிரைனுக்கே பஸ் அனுப்பி தமிழர்களை மீட்டு வந்த நீங்கள் இலங்கையில் போய் மீட்டு வர எவ்வளவு நேரம் ஆகும்.. ஆக விளம்பரங்கள் இல்லாமல் திமுக இல்லை
கார் ரேஸ் நடத்துவதற்கு மட்டும் பணம் உள்ளது. ஆனால் சம்பளம் கொடுக்க பணம் இல்லை.. அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் போக பணம் இருக்கிறது ஆனால் சம்பளம் கொடுக்க பணம் இல்லை..
இதுவரை ஆண்ட எந்த அரசாவது சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று மத்திய அரசிடம் நிதி கேட்ட நிலை உண்டா ?
டெல்லியில் நின்று கொண்டு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்பதும், தமிழகத்தில் வந்து நின்று No 1 மாநிலம் நாங்கள் தான் என்பதும் அசிங்கம் இல்லையா?
சாராயம் விற்பனை லாபம் அனைத்தும் கெஜ்ரிவால் மாதிரி அரசு கஜானாவுக்குள் போகாமல் வேறு எங்கோ சென்றால் எப்படி அரசுக்கு லாபம் கிடைக்கும்
ஓட்டுக்காக இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கும் போதே தெரியும்…. அரசு கஜானா காலியாகும் என்று..
இலவச பஸ் விடணும் என்று எந்த மக்களாவது கேட்டார்களா ? மகளிர் உரிமைத் தொகை ₹1,000 ரூபாய் பணம் வேண்டும் என்று எந்த மக்களாவது கேட்டார்களா ? எந்த மக்கள் கேட்டார்கள்
தமிழக மக்கள் ஹிந்தி வேண்டாம் என்று சொல்லுகிறார்களாம்.. எந்த மக்கள் சொன்னார்கள் ஹிந்தி வேண்டாம் என்று..
உங்கள் பேரக்குழந்தைகள் எல்லாம் ஹிந்தி படிக்கலாம் வேற எவனும் இந்தி படிக்க கூடாது… மக்களை கொஞ்சமாவது வாழவிடுங்கள். அவர்கள் இந்தி படிக்கட்டும். முன்னேறட்டும். அந்த குழந்தைகள் வாழ்க்கை நன்றாக அமையும்
சொல்வது, செய்வது, அத்தனையும் விளம்பரத்திற்காக.. தமிழர் மீது எனக்கு மிக பெரிய பாசம் உள்ளது என்ற விளம்பர படம் ரொம்ப நாள் ஓடாது ஸ்டாலின் அவர்களே
இன்னும் சில வாரங்களில் அடுத்த வெள்ளம் சென்னையில் வரப்போகிறது அதை கவனிக்க துப்பில்லை, கொள்ளை அடித்து விட்டு ஜெயிலுக்கு போனவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டு இருக்கிறார்..
சென்னை மேயருக்கு லிப்ஸ்டிக் பிரச்னை பெரும் பிரச்சனையாக ஓடி கொண்டு இருக்கிறது… ஒரு மேயரின் அழகை பாருங்கள்.. இது எந்த மாதிரி ஆட்சி என்பதை மக்கள் தான் புரிய வேண்டும்
பொருளாதார சீர்திருத்த குழு என்று 6 வெள்ளைக்கார்களை அமர்த்தினீர்களே அவர்கள் என்ன பரிந்துரைகள் கொடுத்தார்கள் . அதில் எதை அமல்படுத்தி மாநில வருவாயை அதிகபடுத்தினீர்கள். . அந்த குழு இன்னமும் இயங்கிக் கொண்டு இருக்கிறதா? அந்த குழுவிற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது போன்ற விவரங்களை தரவும்.
பணத்தை செலவு செய்வது அத்தனையும் விளம்பர செலவு .. பின்னர் எப்படி கஜானாவில் பணம் இருக்கும்
ஆனால் மக்களுக்கு இது புரியாது.. 1000 ரூபாய் வாங்கி கொண்டு ஒட்டு போடும் இந்த மக்களுக்கு எப்போதும் எதுவும் புரியாது
திராவிடம் என்ற ஏமாற்று ஒழிய வேண்டும்.. மக்கள் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்…
மோடியிடம், தமிழர் மீது எனக்கு மிகப்பெரிய பாசம்… மறு பதில்… வாயை மூடிக்கொண்டு திரும்பிய ஸ்டாலின்!
Discussion about this post