சென்னை மெட்ரோ பணிகள் தாமதமாகாமல் இருக்க மத்திய அரசு 50 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன நிலையிலும், மூன்றில் ஒரு பங்கு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் நிதி வழங்க முடியவில்லை என்று கூறிய அவர், மத்திய அரசின் பங்களிப்புடன்தான் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் பெரிதும் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, மத்திய அரசு நிதி தரவில்லை என்று கூறி திமுக அரசியல் ஆடுவதாக விமர்சித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் பணி தாமதம் ஆவதை தடுக்க மத்திய அரசு 50 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post