ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக காங்கிரஸ், ஐஎன்எல்டி, ஜேஜேபி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 2.45 நிலவரப்படி, பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 36 மற்ற கட்சிகளில் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
முதல்வர் நயாப் சிங் சைனி முன்னிலை வகிக்கிறார். அவர் காங்கிரஸின் மேவா சிங்கை விட 840 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் காங்கிரஸின் பூபிந்தர் சிங் ஹூடா 16,823 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதனிடையே, ஹரியானா மக்கள் காங்கிரசுக்கு பாடம் புகட்டியுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப் போகிறது என்று பாஜக மூத்த தலைவர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறினார். வாக்குப்பதிவை பார்த்து கொண்டாடியவர்கள், சரியான வாக்குப்பதிவை பார்த்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை சொல்ல மாட்டார்கள் என நம்புகிறேன்.
Discussion about this post