மொழி அரசியல் செய்வதை திமுக-வினர் கைவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மாநிலம் முழுவதும் தமிழை பா.ஜ.க-வினர் கொண்டு செல்கின்றனர் என்றார்.
மத்திய அரசு மீது மாய பிம்பத்தை உருவாக்க முதல்வர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய தமிழிசை, பிற மொழிகளைக் கொண்டாடினால் தமிழ் சிறுமைப்படுத்தப்படும் என்ற கருத்தை மறுத்தார்.
பெயரில் மட்டுமல்ல வாழ்விலும் தமிழ் உள்ளது என்றும், மொழி அரசியலை திமுக-வினர் கைவிட வேண்டும் என்றும் தமிழிசை கூறினார்.
Discussion about this post