WhatsApp Channel
நேற்று நியூசிலாந்தை வீழ்த்தி உலக கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றியது, இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி.
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றிக்காக இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது ஒரு அற்புதமான குழு முயற்சியாகும், அங்கு அனைவரும் பங்களித்தனர். களத்தில் வீரர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்தது. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
Discussion about this post