WhatsApp Channel
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வார்னர் மற்றும் மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 24-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
மார்ஷ் 9 ரன்களில் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் அதிரடி காட்டினார். பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, லாபுசென்னே 62 ரன்களிலும், ஜோஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் நெதர்லாந்து பந்துவீச்சை பவுண்டரிகள், சிக்ஸர்களுக்கு விளாசினார். 40 பந்துகளில் சதம் அடித்தார். இறுதியில் 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இறுதியில் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.
Discussion about this post